Header Ads Widget

Responsive Advertisement
 வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்ச பூத தத்துவங்களை அடிப்படையாக கொண்டு அனுபவத்தில் அறிந்து உணரப்பட்ட வீடு கட்டுமான கலையாகும். அதாவது நீர், நெருப்பு காற்று பூமி ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும், எட்டு திக்கு பாலகர்களையும் ஆதார மாக கொண்டதாகும். வாஸ்து சாஸ்திரத்திற்கு  ஏற்ப நல்ல வீட்டை கட்டி சந்தோஷமாக வாழலாம். பொதுவாக எட்டு திசைகளிலும் ஒரு கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காண்போம்:-

1. கிழக்கு திசை:-

கிழக்கு திசை சுத்தமாகவும், சற்று பள்ளமாகவும், நல்ல காற்றுஓட்டமாகவும் இருக்க வேண்டும். கிழக்கு திசையில் நெருக்கமாக எவ்வித கட்டிடமும் இல்லாமல் இருப்பது சிறப்பு. பூஜை அறை, சாப்பாட்டு அறை, குழந்தைகளின் அறை போன்றவற்றை கிழக்கு திசையில் அமைப்பது நன்மையை தரும். இந்த திசைக்கு அதிபதி இந்திரன் ஆகும். 

 2. தென் கிழக்கு திசை:-

இதனை அக்னி மூலை என்றும் கூறுவார்கள். எனவே வீட்டில் அக்னியின் ஆதிக்கம் உள்ள சமையல் அறையை இந்த இடத்தில வைக்கவேண்டும். இநத மூலை நீண்டிருக்க கூடாது.

இந்த இடத்தில் கிணறு, தலைவாசல் படுக்கை அறை போன்றவைகள் இருக்க கூடாது. இந்த திசைக்கு அதிபதி அக்னி பகவான்  ஆகும்.   

 3. தெற்கு திசை:-

இத்திசையில் அதிக காலி இடங்கள் இருக்க கூடாது.இந்த திசையில் மாடி படிகள், படுக்கை போன்றவற்ற்றை வைக்கலாம். இந்த திசைக்கு அதிபதி யமன் ஆகும்.

4. தென் மேற்கு திசை:- 

இதை கன்னி மூலை என்றும் கூறுவார்கள். இந்த திசையில் அதிக காலி இடங்கள் இருக்க கூடாது. இந்த திசை மற்ற திசைகளை காட்டிலும் சற்று மேடாக இருக்குமாறு கட்டிடத்தை அமைக்க வேண்டும். இந்த திசையில் கிணறு, செப்டிக் டேங்க், கீழ்நிலை தொட்டிகள் போன்றவை இருக்க கூடாது. இந்த கன்னி மூலையில் ஜன்னல்கள் வைப்பதை கூட தவிர்க்க வேண்டும். இந்த திசைக்கு அதிபதி நைருதி ஆவார்.    

  5. மேற்கு திசை :-

கிழக்கு திசையை விட இந்த திசையில் கட்டிடம் உயர்ந்து இருக்க வேண்டும். கிழக்கு திசையை விட இங்கு காற்றோட்டம் குறைந்து இருக்க வேண்டும். ஆகவே இத்திதிசையும் அதிகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இத்திசையில்   படுக்கை அறை, பூஜை அறைகள் வைப்பது சிறப்பு. இத்திசைக்கு அதிபதி வருண பகவான் ஆகும்.

6. வடமேற்கு திசை:-

இந்த திசைக்கு வாயு மூலை என்றும் பெயர். இந்த திசையில் செப்டிக் டேங்க், கழிவறை போன்றவற்றை அமைக்கலாம். வடமேற்கு திசையும் குறைந்திருப்பது நன்மையை தரும். இந்த திசையில் படுக்கை அறை அமைத்து அதில் கன்னி பெண்கள் படுத்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். கர்ப்பிணி பெண்கள் படுத்தால் எளிதில் சுகப்பிரசவம் ஆகும். இந்த திசைக்கு அதிபதி வாயு பகவான் ஆகும்.   

7. வடக்கு திசை:-

வடக்கு திசை வளர்ந்து இருப்பது நன்மையை தரும். இந்த திசையில் அதிக பாரமான கல், மண் போன்ற பொருள்களை வைக்கக்கூடாது. இந்த திசைக்கு அதிபதி குபேரன் ஆகும்.

8. வடகிழக்கு திசை:-

இந்த திசைக்கு ஈசான்யம் என்று பெயர். இந்த திசையில் கிணறு, கீழ்நிலை தொட்டி போன்றவற்றை வைக்கவேண்டும்.இந்த திசையில் பாரமான பொருள்களை வைக்கக்கூடாது. இந்த திசை வளர்ந்து இருப்பது நன்மையை தரும். இந்த திசைக்கு அதிபதி ஈசானன் ஆகும்.     

                     

Post a Comment